சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி, 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 3 லட்சத்து 48 ஆயிரத்து 288 கோடியே 72 லட்சம் மதிப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், கூடுதல் செலவினம் ஏற்பட்டதால், அதற்காக 3 ஆயிரத்து 531 கோடியே 5 லட்சத்துக்கு துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துணை பட்ஜெட்டில் ஆயிரத்து 500 கோடி, எரிசக்தித்துறை மானியக் கோரிக்கை என்பதன்கீழ் சேர்க்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு 372 கோடியே 6 லட்சத்தை அரசு அனுமதித்துள்ளது - இத்தொகை துணை பட்ஜெட்டில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை என்பதன்கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.