தமிழக சட்டப்பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பு - எதிர்த்த கூட்டணிகள்... பரபரப்பு

Update: 2024-12-10 14:21 GMT

#tnassembly2024 | #mkstalin

தமிழக சட்டப்பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பு - எதிர்த்த கூட்டணிகள்... பரபரப்பு

தமிழ்நாடு கனிமவள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்து, மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.அதற்கு எம்எல்ஏக்களின் கருத்துகளுக்கு மாறுபாடு இல்லை என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், வரி விதிக்கும்போது அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அந்த மசோதா, எம்எல்ஏக்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்