கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் தான் என அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி கூறியதை வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், யாரை மனதில் வைத்து எஸ்.பி.வேலுமணி இதை சொன்னார் என தெரியவில்லை, ஆனால் யார் வேண்டுமானாலும் தேர்தல் களத்திற்கு வரட்டும், கூட்டணி வைக்கட்டும், 2026ல் வெற்றி தங்களுக்கு தான் என தெரிவித்தார்.