அதிமுக சார்பில் பேச அனுமதி கேட்ட ஓபிஎஸ் - ``முடியவே முடியாது''.. திட்டவட்டமாக சொன்ன எஸ்.பி. வேலுமணி

Update: 2025-03-20 02:26 GMT

சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு தர முடியாது என, அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் அதிமுக சார்பில் பேச ஓபிஸ் வாய்ப்பு கேட்டபோது, அதற்கு கட்சியின் கொறாடவிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணியை அருகில் அழைத்த சபாநாயகர், இதுபற்றி கூறிய நிலையில், அதற்கு எஸ்.பி. வேலுமணி மறுப்பு தெரிவித்து தனது இருக்கைக்கு சென்றுவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்