தனியார் மயமாக்கல் என்பது அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. சென்னை தி நகரில் 42வது அகில இந்திய வங்கி எஸ்சி எஸ்டி ஊழியர் நல சங்க பொது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்...
மத்திய அரசு ஒரு மதத்தை சார்ந்து இருக்க கூடாது என்பது அரசியலமைப்பின் நுட்பமான ஒரு புள்ளி என்றும், இதற்கான அரசியல் யுத்தம்தான் இந்தியாவில் நடக்கிறது எனவும் தெரிவித்த திருமாவளவன் அதை மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்...
சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல என்று தெரிவித்த அவர், சமத்துவம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் அனைவரும் முன்னேற வேண்டும் என்பது தான் சமூக நீதி என குறிப்பிட்டார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 234 தொகுதிகளையும் தனித்தனி மாவட்டங்களாக அறிவித்து தேர்தல் பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்டார்...