பிரஸ் மீட்டில் பவன் கல்யாண் குறித்து எழுந்த கேள்வி - திருமா கொடுத்த பதில்
டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்வோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். த.வெ.க தலைவர் விஜய்யின் குற்றச்சாட்டு தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் பேட்டி அளித்தபோது இதனை திருமாவளவன் தெரிவித்ததுடன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்தை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.