திடீர் ட்விஸ்ட் - ரேவண்ணா விவகாரத்தின் - முக்கிய புள்ளி மீது பாய்ந்த - பாலியல் வழக்கு
பாலியல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து கடந்த ஆண்டே மாநில பாஜக தலைமைக்கு தாம் கடிதம் எழுதியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், தேவராஜே கவுடா. ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை தேவராஜே கவுடா தான் வெளியிடப்பட்டதாக அவர் மீது ஒருபுறமும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே, சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தேவராஜே கவுடா மீது கடந்த மாதம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில், அந்த வழக்கில் தற்போது தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.