கிரேனில் இறங்கிய 300 கிலோ சாக்லேட் மாலை - எப்படி இருந்த மாலை இப்படி ஆகிருச்சே...
செங்கல்பட்டில் திமுக வேட்பாளருக்கு அணிவிக்கப்பட்ட 300 கிலோ எடையுள்ள சாக்லெட் மாலையை, அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போதே கூடியிருந்த தொண்டர்கள் அக்கு அக்காகப் பிரித்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... வண்டலூர் நெடுங்குன்றம் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது செல்வத்திற்கு 300 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை கிரேன் மூலம் போடப்பட்டது. மாலை போடப்பட்ட சிறிது நேரத்திற்குள் கிரேனில் தொங்கிய மாலையை கூடியிருந்த தொண்டர்கள் போட்டி போட்டு பிரித்து சாக்லெட்டுகளை அள்ளிச் சென்றனர்...