நெல்லையில், கழுத்தில் மதுபான பாட்டில்கள் மாலையுடன் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், முதலமைச்சரின் புகைப்படத்தை டாஸ்மாக் கடையில் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் பாஜக நிர்வாகியுமான புவனேஸ்வரி மதுபான பாட்டில்களை மாலையாக அணிந்து, சங்கு ஊதி ஊர்வலமாக வந்தார். அப்போது நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டி சென்றார்.