"நான் தமிழ் மீடியம்.. உதயநிதி, கனிமொழி?" ஒற்றை விரலை நீட்டி தமிழிசை ஆவேசம்

Update: 2025-03-28 05:25 GMT

தமிழகத்தில் உள்ள சாமானிய மக்கள் 3 மொழி கற்பதை திமுக அரசு தடுப்பதாக பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தேரடி வீதியில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மட்டுமே பாஜக போராடுவதாகவும், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி. கனிமொழி ஆகியோர் தமிழில் படித்துதான் வளர்ந்தார்களா என திமுக அரசை நோக்கி தொடர் கேள்விகளை எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்