டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்றபோது கைது செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டார்.
சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் தடுப்புக் காவலில் வைத்து இருந்தனர். அப்போது, 6 மணிக்கு மேல் பெண்களை ஏன் காவலில் வைக்க வேண்டும் என போலீசார் உடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.