நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், தெருநாய்களால் ஏற்படும் அபாயங்களை எடுத்துரைத்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து தெரிவித்த அவர்,
நாட்டில் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் இருப்பதாகவும், உலகில் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36 சதவீதம் இந்தியாவில் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்டகால திட்டம் வகுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.