முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க நீதிபதி ஆறுமுக ஆணையம் அமைக்கப்பட்டதை போல், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற அறை சிறியதாக இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட 2 ஆயிரத்து 252 பேரை ஒரே நேரத்தில் அழைப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.