செங்கோட்டையன் பற்றி பிரஸ் மீட்டில் எழுந்த கேள்வி - எதிர்பாராத பதில் அளித்த ஈபிஎஸ்

Update: 2025-03-16 02:23 GMT

தன்னை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோபி சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்குச் செல்லாமல், சபாநாயகர் அறையில் காத்திருந்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்