"14 வருஷமா பேசுனது இருக்கு.. சுப்ரீம்கோர்ட் போனாலும் விடமாட்டேன்" புயலை கிளப்பிய நடிகை
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலெட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, கடந்த 14 வருடமாக சீமான் தன்னை ஒரு பாலியல் தொழிலாளி என அவதூறு பரப்பி வருவதாகவும், சீமான் உச்சநீதிமன்றம் வரை சென்றாலும், அவருக்கு தண்டனை வாங்கித்தராமல் தான் இந்தப் போராட்டத்தை விடப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.