RB உதயகுமார் கேட்ட கேள்வி..? மத்திய அரசுக்கு பறந்த கடிதம்.. பதில் கொடுத்த அமைச்சர்..
விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா-விடை நேரத்தின்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், விதிகளை மீறி இயங்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பலமுறை நேரில் கடிதம் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் மக்களை பாதிக்காத வகையில் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


