ஒரு நாள் முழுவதும் பிரதமர் பங்கேற்கும் மாநாடு - கை கோர்க்கும் ரஜினி...வெளியான அறிவிப்பு
மத்திய அரசு தரப்புல மே மாசம் நடத்தப்பட உள்ள உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கப் போறாங்க...உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு மும்பைல மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தரப்புல மே 1ல இருந்து 4ம் தேதி வரைக்கும் நடக்கப் போகுது...மும்பைல இருக்க ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர்ல இந்த மாநாடு நடக்க போகுது..
.பிரதமர் மோடி ஒரு நாள் முழுவதும் பங்கேற்பாரு...இதுல ஆலோசனைக் குழு உறுப்பினர்களா இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகர்கள் அமீர்கான் அக்ஷய்குமார், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மோகன்லால், நடிகை தீபிகா படுகோனே, ஹேமாமாலினி, உள்ளிட்ட பிரபலங்கள் இருக்குற நிலைல நடிகர் ரஜினிகாந்த் இணைஞ்சுருக்குறதா அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டுருக்கு...இவுங்க எல்லாரும் மே மாசம் நடக்கப் போற உச்சி மாநாட்டுல கலந்துக்க போறாங்க...