வயதான கட்சி நிர்வாகியை மேடையிலேயே அறைந்த ராஜேந்திர பாலாஜி - பரபரப்பு காட்சிகள்
Rajenthra Bhalaji | வயதான கட்சி நிர்வாகியை மேடையிலேயே அறைந்த ராஜேந்திர பாலாஜி - பரபரப்பு காட்சிகள்
விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், மேடையில் கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, அ.தி.மு.க நிர்வாகி நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார். அப்போது கடுப்பான ராஜேந்திரபாலாஜி, அந்த நிர்வாகியை திடீரென அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...