பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது அமெரிக்க பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க, டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தனது அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ராகுல் காந்தி அவசரமாக நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.