"மாநில அந்தஸ்து வேண்டும்" - 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அரசு

Update: 2025-03-28 03:33 GMT

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து தர வேண்டும் என அவையில் தனி நபர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, தனிநபர் தீர்மானங்கள் அனைத்தையும், அரசின் தீர்மானமாக மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் ராங்கசாமி வலியுறுத்தினார். புதுச்சேரி அரசு தங்களுக்கு மாநில அந்தஸ்த்து கோரி 16 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிட தக்கது

Tags:    

மேலும் செய்திகள்