மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் - இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்களும் விரும்புவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, எனவே தான் அவர்கள் இவ்வளவு பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்றியதாக தெரிவித்தார். காஷ்மீரில் அமைதி திரும்பத் தொடங்கிய நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை விகிதத்தில் அதிகரித்து வந்தது...மக்களின் வருமானமும் அதிகரித்து வந்தது... இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்தன...நாட்டின் எதிரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எதிரிகள் இதை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.