அடுத்த வாரம் தாய்லாந்து, இலங்கை செல்லும் பிரதமர் மோடி

Update: 2025-03-29 06:30 GMT

ஏப்ரல் மூன்று முதல் ஆறாம் தேதி வரை அரசு முறை பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தாய்லாந்தில் வரும் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற இருக்கும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் ஐந்தாம் தேதி இலங்கை அதிபரின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்