PM Modi Speech | பொது மக்களிடம் திருடப்பட்ட ரூ.22,000 கோடி மீட்பு - பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாக பெருமிதம் கொண்டார். மேலும், பொதுமக்களிடம் திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை, தற்போது வரை 22 ஆயிரம் கோடி ரூபாயை மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.