கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணிக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அடிக்கல் நாட்டினார். ஆயிரம் சதுர அடி பரப்பில், 42 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் கேரள மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசு உதவி செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்..