விமர்சித்து பேசிய `நாதக’ இடும்பாவனம் - சட்டென மேடைக்கு கீழே திரண்ட திமுகவினர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளாலப்பட்டியில் நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது, திமுகவை அவர் விமர்சித்துப் பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மேடைக்கு கீழே திரண்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் திமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தபின் கூட்டம் நடைபெற்றது.