"4 ஆண்டாக சத்துணவு ஊழியர்களை நியமிக்கவில்லை" - பேரவையில் அதிமுக MLA மரகதம் ஆவேசம்
தி.மு.கவின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், ஒரு சத்துணவு ஊழியர்கள் கூட நியமிக்கப்படவில்லை என மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் குற்றம்சாட்டியுள்ளார். சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் அளிக்க அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகள், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டிய அ.தி.மு.க உறுப்பினர் மரகதம் குமரவேல், மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.