"வரிப்பகிர்வு தமிழ்நாட்டிற்கு 207% அதிகம்".. புயலை கிளப்பிய நிதியமைச்சர்

Update: 2025-03-28 03:27 GMT

மாநிலங்களவையில் 2025-ம் ஆண்டிற்கான நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மசோதா மீதான விவாதத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு 2014 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்டதை விட 207% அதிகம் என அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்