தமிழகத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் மடத்துக்குளம் தொகுதியில் புதிய சட்டக்கல்லூரி அமைக்க அரசு முன் வருமா? என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு, புதிய சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் பத்து ஏக்கர் நிலமும், நூறு கோடி ரூபாயும் தேவைப்படும் என ரகுபதி கூறினார்.