மோடி, ஷாவையே அலறவிடும் தனி ஒருவள்..பேச்சை கேட்க அலை அலையாய் கூடும் கூட்டம்..கல்பனாவின் அசுர வளர்ச்சி
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பிரசாரக் கூட்டத்தில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பிரசாரம் தனிக்கவனம் பெற்றிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
அனல் பறக்கும் ஜார்க்கண்ட் பிரசார களத்தில் தனித்து தெரிகிறது கல்பனா சோரனின் பிரசாரம்...
ஜனவரி மாதம் கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததும் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தவர்தான் கல்பனா..
ஆனால் அரசியல் அரியணைக்கு புதிதாக வந்தவர் போல் இல்லை அவரது பேச்சு...
மம்தா பாணியில் அவரது பிரசாரம், தெளிவான அவருடைய பேச்சு, ஜார்க்கண்ட் அரசியலில் அவருக்கு தனியிடத்தையே கொடுத்திருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கல்பனா தலைமையிலேயே இந்தியா கூட்டணி ஜார்க்கண்டில் களம் கண்டது. அப்போது 5 பழங்குடியின மக்களவை தொகுதியை இந்தியா கூட்டணி வென்றது.
ஜூன் மாதம் கேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வந்ததுமே, சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசார சுமையை தனது தோளில் சுமக்க தொடங்கி விட்டார் கல்பனா... பெண் வாக்காளர்கள், பழங்குடியினர் வாக்குகளை கவருவதில் கல்பனாவின் திறன் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஜார்கண்டில் மொத்தமுள்ள 2.6 கோடி வாக்காளர்களில் பெண்கள் வாக்கு 1.29 கோடியாக இருக்கிறது. சட்டப்பேரவை பெண்கள் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என்பதால் அவர்களை குறிவைத்து களத்தில் கல்பனா பிரசாரம் களைக்கட்டியிருக்கிறது
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பெண் தொழில் முனைவோருக்கு கேமந்த் சோரன் அரசாங்கம் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் பேசி, வாக்காக மாற்ற பாலமாக பம்பரமாக சுழல்கிறார் கல்பனா. பாஜகவுக்கு புள்ளி விபரமாக கவுண்டர் கொடுப்பதிலும் தனிக்கவனம் செலுத்துகிறார்.
மாநிலத்தில் பாஜக பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் வழங்குவோம் என வாக்குறுதி கொடுக்க, நாங்கள் வருகிறா டிசம்பர் மாதமே 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கவிருக்கிறோம் என்கிறார் கல்பனா...
20 ஆண்டுகளாக ஜார்க்கண்டில் ஆட்சி செய்த பாஜக செய்தது என்ன? என கேள்வியை எழுப்பும் அவர், மத்திய அரசு ஜார்க்கண்டுக்கான நிதியை தரவில்லை, மத்திய அரசு ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடியை ஜார்க்கண்ட்க்கு தர வேண்டும் என செல்லும் இடங்களில் எல்லாம் சொல்கிறார்.
ஜார்க்கண்டில் பழங்குடியினர் வாக்கை வசமாக்க, வங்கதேச இஸ்லாமிய ஊடுருவல்காரர்கள் விவகாரத்தை முக்கிய பிரசார வியூகமாக பார்க்கிறது பாஜக..
பிரதமர் மோடி, அமித்ஷா அடுத்தடுத்து வங்கதேச இஸ்லாமியர் விவகாரத்தை பேச... அதற்கு ஷார்ப்பான பதிலை கொடுக்கிறார் கல்பனா...
ஜார்க்கண்ட் எங்கேயாவது சர்வதேச எல்லையை பகிர்ந்து இருக்கிறதா? சர்வதேச எல்லையை பாதுகாப்பது யார்...? இதற்கு பாஜக அரசுதானே பொறுப்பு என கனையை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விடுகிறார் கல்பனா..
இந்தி, ஆங்கில மொழிகளில் சரளமாக பேசும் கல்பனா கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உச்சி மதிய வேளையிலும் அவரது பேச்சை கேட்க மக்கள் கூட்டம் நிற்கிறது. ஜார்க்கண்ட் எங்கும், கல்பனா ஜி எங்கள் பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கூட்டத்தை ஈர்ப்பதில் மட்டுமல்ல.. பாஜகவை கார்னர் செய்வதிலும் தனிக்கவனம் வெற்றிக்கும் கல்பனாவின் பிரசாரம் இந்தியா கூட்டணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் என்றே சொல்கிறார்கள் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள்...