"அதிமுக கூட்டணி கதவை திருமாவளவன் எப்படி மூட முடியும்?"..கேள்வி எழுப்பிய நயினார்

Update: 2025-04-28 02:09 GMT

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், எப்படி அதிமுகவின் கூட்டணி கதவை மூட முடியும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மெரினா நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே அனுமதி கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகே உள்ள மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், துணை முதல்வராக இருப்பதால் உதயநிதி ஸ்டாலின் அடக்குமுறையை கையில் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்