BREAKING || புள்ளி விவரங்களை வெளியிட்டு... ஈபிஎஸ்க்கு பதிலடி
திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கபட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதை மக்கள் அறிவர். மேலும் இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பரப்பிய பொய்யை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கி ஆதாரத்தோடு பலமுறை எடுத்துக் கூறியாயிற்று. உயர் நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் தினமும் விடிந்து எழுந்தவுடன் தனது அரசியல் ஆதாயத்திற்காக, அரைத்து அரைத்து புளித்த அதே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இன்று உயர் நீதிமன்றமே எதிர்கட்சிகளின் செயலை தாங்கமுடியாமல் அவர்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது.. ‘எதிர்க்கட்சிகள் வெறும் விளம்பர நோக்கில் இந்த விவகாரத்தை அணுகுவதாக கூறி’ கடுமையாக கண்டித்துள்ளது. இதைத் தான் ஆரம்பம் முதலே நாங்கள் கூறி வருகிறோம். இன்று அதை உயர்நீதிமன்றமே உறுதிப்படுத்தி உள்ளது. ஆனாலும் எடப்பாடிக்கு ஒரே பொய்யை திரும்பத் திரும்ப பேச எந்த கூச்சமும் இருப்பது இல்லை.
அடிமை அதிமுக என்ற கட்சி இனி எடப்பாடி கையில் இருக்குமோ. . . இருக்காதோ. . . என்ற வகையில், ‘காற்றில் கிழிந்து காணாமல் போக காத்திருக்கும் சின்னம்’ தொடர்பான வழக்கு நடந்து வருவதால் அதைத் திசை திருப்ப உயர்நீதிமன்றமே கண்டித்த பின்னும் அரசியல் சுயநலத்திற்காக பாதிக்கபட்ட மாணவியின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலையின்றி நடந்துவருகிறார் பழனிசாமி.