ஈபிஎஸ்-க்கு புது சிக்கல்.. விரைவில் விசாரணை | EPS | ADMK

Update: 2024-12-15 02:45 GMT

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றபின் தொடர் தோல்வியால் மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கையை இழந்து வருகிறது என்றும், திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு அளித்த மனுவை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெறுகிறது. கூட்டத்தில் வழக்கமாக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தவிர்த்து அமைப்பு ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால் இந்த செயற்குழு - பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2022-ல் நடைபெற்ற அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே உட்கட்சி அமைப்பை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டே ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகிய இருவரின் புகைப்படங்களுடன் கூடிய உறுப்பினர் அட்டை மாற்றப்பட்டு ஈ.பி.எஸ் புகைப்படம் இடம்பெற்றிருக்க கூடிய புதிய உறுப்பினர் அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என தெரிய வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்