பஹல்காமில் பாதிக்கப்பட்ட தமிழரின் மனைவியிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பரமேஸ்வரன் அவர்களின் உடல்நலம் குறித்து அவரது மனைவி டாக்டர் நயன்தாரா அவர்களிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.