சென்னை அடையாறு ஆறு 30 மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் புதிதாக 6-ஆவது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எம்.பி. தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கின்றன என்று தெரிவித்தார்.