#Breaking|| ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி உத்தரவு.. "பச்சோந்தி" என அதிகாரிகள் மீது சீறிய நீதிபதி
- சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு
- லஞ்ச ஒழிப்பு துறை, ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012ல் உத்தரவை மறு ஆய்வு செய்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
- இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் - உயர் நீதிமன்றம்
- குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றம்
- சட்டம் எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம் - உயர் நீதிமன்றம்
- அதிகாரவரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்னைகள் உள்ளன - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிபுத் துறை செயல்படுகிற்து - உயர் நீதிமன்றம்
- லஞ்ச ஒழிப்புத் துறை அரசில் இருந்து விலகி செயல்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்
- 2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை - உயர்நீதிமன்றம்
- திமுக அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கிலும் உயர் நீதிமன்றம் நடவடிக்கை