அதிர்வை கிளப்பிய அண்ணாமலை

Update: 2025-04-16 02:55 GMT

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக மக்கள் தனது ஆட்சியை புகழ்வதாக கற்பனை உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுக்களுக்காக எவ்வளவு செலவிட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, தற்போது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கவே இந்தக்குழுவை அமைத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்