அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் தற்கொலை?
ஜெயங்கொண்டம் அருகே அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள சின்னவளையம் தெற்குதெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. 80 வயதான இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவர் சற்று மனப்பிறழ்வு அடைந்தவர் என கூறப்படும் நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கபட்டார். உயிரிழந்த கோவிந்தசாமிக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
Next Story