டெல்லி பறக்கும் அண்ணாமலை... காத்திருக்கும் முக்கிய பொறுப்பு..?

Update: 2025-04-22 10:44 GMT

பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பா.ஜ.க தலைமை இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் அண்ணாமலையில் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்கள் தேசிய அளவிலோ, மத்திய இணையமைச்சர் பதவியிலோ அல்லது மாநில ஆளுநர் பதவிக்கோ நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்