"லண்டன் ஸ்கூல் மாணவரான அண்ணாமலை அவர்களே.." - வெளுத்து வாங்கிய தவெக

Update: 2025-03-18 02:09 GMT

விஜய்யை விமர்சித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தவெக மாநில இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை, அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு பாஜக - திமுக மறைமுக கூட்டு வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருவதாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை உங்களை நிராகரித்த மக்கள், அடுத்த தேர்தலில் மீண்டும் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்