அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2025-03-28 03:05 GMT

உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் காவலர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்