குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த மசோதாவின் மூலம், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத்தெரிவித்தார். மேலும், இந்த மசோதா குடியேற்ற சட்டங்களை விரிவாக மாற்றியமைக்கவும், வலுப்படுத்தவும் வகை செய்வதாக அவர் கூறினார்.