ஜாமின் கிடைத்தும் அமர் பிரசாத் ரெட்டிக்கு நேர்ந்த அடுத்த சோகம்

Update: 2023-10-28 04:34 GMT

சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை வசிக்கும் வீடு அருகே கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் ரகளையில் ஈடுபட்ட

தமிழக பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நுங்கம்பாக்கம் வழக்கு தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் வரும் நவம்பர் 9 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதே போல் கோட்டூர்புரம் காவல் நிலைய வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் 

Tags:    

மேலும் செய்திகள்