“4 ஆண்டுகளில் 27 லட்சம் மின் இணைப்புகள்" - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி
4 ஆண்டுகளில், 27 லட்சத்து 76 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்...வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடும், மின் துறையும் சாதனை படைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர்,
அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்தி வருவதாகவும், இதில் தமிழகம் 10 ஆயிரத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்து இந்தியாவிலேயே 4வது இடத்தில் உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்