ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023- "பட்டியலின பழங்குடியினருக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு"

Update: 2023-12-07 14:38 GMT

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023, புதன் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2019 ஆகஸ்ட்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக மாற்ற வகை செய்யும் மறுசீரமைப்பு மசோதா 2023 மக்களவையில் புதன் அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 114 இடங்கள் அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது. 2019 வரை ஜம்மூ காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 107 இடங்கள் இருந்தது ஒப்பிடத்தக்கது. 9 இடங்கள் பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 370 அமலில் இருந்த வரை ஜம்மூ காஷ்மீரில் இடஒதுகீடு முறை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சட்டமன்றத்திற்கு

ஜம்மூ காஷ்மீர் ஆளுநர், 3 உறுப்பினர்களை நியமனம் செய்யவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்