அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி முதல் கோப்பையில் முத்தமிட்ட குஜராத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்த‌து.

Update: 2022-05-30 02:09 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்த‌து. அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய குஜராத் அணி, 18 புள்ளி ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்த‌து. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, குஜராத் அணி தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை, குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தட்டிச் சென்றார். அறிமுக போட்டியிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்