நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் - சுப்ரீம்கோர்ட் என்ன சொல்ல போகிறது?
டெல்லியில் தீ விபத்தின்போது ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்குரைஞர் மேத்யூ நெடும்பாறா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைத்துள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துளார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.