சூட்கேஸில் மனைவி உடல் - தற்கொலைக்கு முயன்ற கணவன்

x

பெங்களூருவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராகேஷ் மற்றும் கவுரி ஆகியோருக்கு திருமணமாகி பணியின் காரணமாக பெங்களூருவில் தங்கியிருந்தனர். இருவரும் இரவு வழக்கம்போல் உணவுக்காக அமர்ந்திருந்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது கவுரி கத்தியை எடுத்து வீசியதால் ராகேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், அதே கத்தியை எடுத்து கவுரியை குத்தி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மயங்கி விழுந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ராகேஷ் விஷம் அருந்தியை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்