`நாகினி மனைவி’க்கு வாக்கப்பட்டதால் கொடூரம்.. பாம்புடன் நுரைதள்ளி செத்த கணவன்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு, பின்னர் அவரது சடலத்தின் அருகே விஷப்பாம்பை போட்டு பாம்பு கடித்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன்அமீத் காஷ்யாப் மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி? என சமூக வலைதளங்களில் ஆராய்ந்து, கள்ள காதலனுடன் சேர்ந்து மனைவி இந்த கொலையை செய்தது போலீஸ் விசாரணையின் போது தெரியவந்தது. கள்ளக்காதலன் அமர்ஜீத்தின் உதவியுடன் மனைவி ரவிதா பாம்புபிடிக்கும் நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து பாம்பை வாங்கி வந்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.