3 குழந்தைகளை கொலை செய்த தாய்

x

தெலங்கானாவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சென்னையா, ரஜிதா தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி ரஜிதா தனது குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் அதனை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்