சுனிதாவை மீட்க விண்ணில் பாய்ந்த 9 ராக்கெட் ..விரைவில் பூமிக்கு வரப்போகும் சுனிதா
இந்திய நேரப்படி நேரப்படி இன்று இன்று அதிகாலை 4.33 மணிக்கு புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 9 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய - விண்வெளி வீரர் கிரிஸ் கு பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர்
இந்த விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அதன்பின் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 19-ந்தேதி டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர்
சர்வதேச விண்வெளி மையத்தில் விண்கலங்களை இயக்க 2 தளங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு தளத்தில் விண்கலம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. மற்றொரு தளத்தின் மூலம் பூமிக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கும் இடையே விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன
9-வது குழு சென்ற டிராகன் விண்கலம் 2-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்டூரன்ஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 10-வது குழு சென்றடைந்த பிறகு சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேர் அடங்கிய 9 வது குழுவின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது